15 February 2014

டேலி வேலு

                                   பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் கண்காணிப்பாளர்கள் ,கணக்கு உதவியாளர்கள் , மற்றும் டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர்கள் ஆகியோருக்கு 5 நாட்கள் டேலி பயிற்சி சென்னை எக்மோர் பயிற்சி நிலையத்தில்  அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் பேட்ச்சாக 10.02.2014 முதல் 14.02.2014 வரை 5 தினங்கள் திருச்சி,புதுக்கோட்டை,காஞ்சிபுரம்,பெரம்பலூர்,அறந்தாங்கி,கள்ளக்குறிச்சி ஆகிய 6 சுகாதாரப்பகுதி மாவட்டத்தைச் சேர்ந்த வர்களுக்கு இப்யிற்சி வழங்கப்பட்டது. இதில் திருச்சி சார்பாக கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்டியது.இப்பயிற்சி ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என சென்னைக்கு கிளம்பும் போது எதிர்பார்க்கவில்லை.பயிற்சி அளித்தவர்கள் ”சாய்சொலிஷன்” பயிற்சியாளர்கள் திரு,சாம்சன் ஜெயக்குமார், திரு.டேலி வேலு ஆகியோர்.வயது வித்தியாசமில்லாமல் 20 முதல் 57 வரை அனைத்து வயதுக்காரர்களும் பயிற்சியில் கலந்து கொண்டோம்.எளிமையாக யாவர்க்கும் புரியும் வகையில் துறைசார்ந்த விஷயங்களுடன் இக்குழுவினர் வகுப்பு எடுத்த விதம் அருமை.இடையிடையே கேள்விகேட்டு அதற்கான பதிலை வேறு ஒருவரைச் சொல்லச் செய்த திரு வேலு அவர்களின் சாதுரியம் அபாரம்.கொஞ்சம் கூட அசட்டையாக இருந்துவிட முடியாது எப்போது கேள்வி கேட்பார் எனத்தெரியாது.தவறான பதில் சொன்னால் கேலி செய்யாமல் மீண்டும் அந்தப்பகுதியை விரிவாக நடத்துவார். திரு.சாம்சன் அவர்களோ முழுக்க முழுக்க பாடம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார் , சில சமயம் நடுவில் சில விடுகதைகளை தொடுப்பார் கொஞ்சம் சொக்கிப்போயிருக்கும் வகுப்பு அப்போது நிமிர்ந்து உட்காரும். திடீரென உள்ளே நுழையும் ”கார்த்தி”யோ கேள்விக்கனைகளோடே உள்ளே வருவார்.இவரது கேள்வி நடைமுறையில் ஏற்படும் சிக்கல் தொடர்பானதாக இருக்கும்.மொத்தத்தில் ஒரு சிறந்த பயிற்சி.நம்மாலும் முடியும் என்கிற நம்பிக்கையை இதுவரை டேலி தெரியாதவர்களுக்கும், நாம் இனி தங்கு தடையின்றி டேலியை கையாளலாம் என்கிற நம்பிக்கையை முன்னமே டேலி தெரிந்த ஊழியர்களுக்கும்  ஏற்படுத்திய ஒரு பயிற்சி.இதில் குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம் எங்கள் மண்டையில் எப்படியாவது டேலியை ஏற்றிவிட வேண்டும் என்கிற இவர்களின் ஈடுபாடு, அதற்கான இவர்களின் பிரம்மப்பிரயத்தனம். இந்த பயிற்சி முடிவுநாளன்று 25 மதிப்பெண்களுக்கு தேர்வு.ஆச்சரியமான விஷயம் என்னவெனில் எல்லோருமே 18 க்கு மேல் தான் மதிப்பெணெடுத்தனர். முதல் மதிப்பெண் எடுத்தவர் 57 வயதாகும் இன்னும் 11 மாதங்களில் ஓய்வுபெறப்போகும் புதுக்கோட்டை மாவட்ட கன்காணிப்பாளர் திரு,கணேசன் அவர்கள். இடைவேளைகளில் கொடுக்கப்படட  ”அட்டு” டீ ,பிஸ்கெட், சுண்டல்  தவிர மற்ற அனைத்தும் அற்புதம். டேலி வேலு அவர்களுக்கு ..ஓ..ஓ..ஓ.

1 comment:

Tally Perumal said...

Thanks for appreciating our friends..Mr.Velu & Mr.Sam...

Tallyperumal