15 April 2012

இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று



தமிழகம் முழுவதும் உள்ள, 70 லட்சம் குழந்தைகளுக்கு, இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடக்கிறது. 


தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் சுமார் 40,000 போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்படும்.


 பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கூடுதலாக 1,000 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன


. இந்த மையங்கள் இரவு பகலாக 3 நாள்களுக்குச் செயல்படும். தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு 900 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாள்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாள்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.


 சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும்.


 இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 


No comments: