15 March 2012

யார் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி?


13.03.2012 அன்று மைலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய வட்டார அளவிலான ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தினை கரூர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் திரு.சம்பத்குமார் அவர்கள் நடத்தினார்.அமைச்சுப்பணியாளர்கள் சார்பாக நானும் கலந்து கொண்டேன்.கூட்டம் முடிந்து சாவகாசமாய் மரத்தடியில் பேருந்துக்காக காத்திருந்த போது கிராம சுகாதார் செவிலியர்,சமூக சுகாதார செவிலியர்,பகுதி சுகாதார செவிலியர் ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்த போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களைப் பற்றி பேச்சு திரும்பியது.அப்போது டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி பற்றி நானறிந்த சில விஷயங்களை கூறியபோது அனைவரும் ஆவலுடன் கேட்டதுடன்சார் அவுங்க அவ்வளவு பெரிய ஆளாஎன ஆச்சரியப்பட்டனர்.டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பற்றிய சில தகவல்கள் கீழே.



  • புதுக்கோட்டையில் பிறாந்த இவர் முதன் முதல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்.
  • மருத்துவத்துறைக் கல்வியில் எம்.பி.சி.எம் என்கிற பட்டத்தை முதன் முதல் பெற்ற தமிழகப் பெண்மணி
  • இந்திய அரசின் உதவித்தொகை பெற்று பிரிட்டனுக்கு சென்று, பெண்கள் - குழந்தைகளின் நோய் பற்றி ஆராய்ச்சி செய்த முதல் பெண்.
  • தமிழக சட்டமன்றாத்தில் துணைத்தலைவர் என்ற பதவியை எதிர்ப்பில்லாமல் ஒரு மனதாகத் தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அகியவர்களுடன் இணைந்து இந்திய மகளிர் மன்றம் என்ற அமைப்பை பெண்ணுரிமைகளுக்காகப் போராடுவதற்காக துவங்கியவர்.
  • பால்ய விவாகம் ஒழிய முக்கியக் காரணமாக இருந்தவர்.
  • நகராட்சி,சட்டமன்றம்,சட்டமேலவை ஆகியவைகளில் பெண்களுக்கும் உரிமைவேண்டும் என்பற்கு எடுத்துக் காட்டாக இவைகளில் உறுப்பினர்களாக இருந்தவர்.
  • தேவதாசி முறைகள் இருக்கக் கூடாது பெண்கள் தன்மானத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழவேண்டும் என்பதற்காக தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர்.
  • அவ்வை பொதுநலப்பணி மருத்துவமணையை சென்னை அடையாறில் நிறுவியவர்.கிராம முன்னேற்றம், கிராம சுகாதாரம்,தண்ணீர்வசதி,கல்வி வசதி,நூலக வசதி ஆகியவைகளை அமைத்துத் தந்தவர்.
  • அவ்வை இல்லம் உறுவாக்கியவர். இங்குள்ள பெண்கள் மருத்துவ மணைகளில் நர்ஸ்களாகவும்,சுகாதார மேற்பார்வையாளர்களாகவும்,கிராம சேவகிகளாகவும்,சுகாதார செவிலியராகவும்,பெண்கள் நலத் தொண்டர்களாகவும் உறுவாக்கப் பட்டுள்ளனர்.
  • சென்னை புற்று நோய் ஆராய்ச்சி கழகத்தை நிறுவியவர்.
  • மகாத்மா காந்தியினிடத்தில் இவருக்கிருந்த செல்வாக்கினை பயன் படுத்தி 1945 ல் டாக்டர் ராமச்ச்சந்திரன் என்பவர் திண்டுக்கல் அருகே காந்திகிராமம் என்ற ஒரு கிராமம் அமைய பரிந்துரைச் செய்து , காந்தி கிராமம் நிறுவிடச் செயல்பட்டார்.
  • காந்தியடிகள் கைது செய்யப்பட்ட போது அதைக் கண்டித்து ஆங்கில கவர்னரால் நியமனம் செய்யப்பட்ட தனது சட்ட மன்ற மேலவை உறுப்பினர், துணைத்தலைவர்,பதவிகளை ராஜினாமா செய்தவர்.
  • 1933ல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்.
  • “மிஸ்மேயோவின்” புத்தகக் குறிப்புகள் இந்திய மருத்துவமணை நோயாளிகள் பற்றிய குறிப்புத்தானே தவிர இந்தியர்களின் வாழ்க்கைப் படப்பிடிப்பு அல்ல::” என அமெரிக்காவிலே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தவர்.
  • 1952 ல் ராஜாஜி முதல்வராக பதவி ஏற்றபோது இவரை மீண்டும் மேலவை உறுப்பினராக கேட்டுக் கொண்டார்.அதைவிட முக்கியமானது புற்று நோய் மருத்துவ மணை அமைப்பது என்று சொல்லி மேலவை உறுப்பினர் பதவியை நிராகரித்தார்.
  • மகாகவி பாரதியை நேரில் சந்தித்தவர்.பாரதியே இவரிடம் பெணுரிமை பற்றி அவர் ஆசிரியராக இருந்த இந்தியா பத்டிரிக்கையி எழுத கேட்டுக் கொண்டார்.
  • “எனது சட்டமன்ற அனுபவங்கள்” என்ற நூலை எழுதியவர்.
  • இவரது கணவர் திரு.சுந்தர ரெட்டி.இவரும் டாக்டர்.தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த சுப்பராய ரெட்டியாரின் தமக்கை மகன் இவர்.

1 comment:

மோ.சி. பாலன் said...

அம்மையாரைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி. பெண்மைக்குப் பெருமை.