22 September 2011

ஒரு கதை கேளுங்கள்.

ஒரு அரசு ஊழியர் தனது குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போது அகால மரணமடந்துவிட்டார்.அவர் பணிபுரிந்த அலுவலகம் பொது சுகாதாரத்துறையைச் சேர்ந்த சிதம்பரம் யானைக்கால் நோய்தடுப்பு திட்ட அலுவலகம்.பணி - உதவியாளர் ( அமைச்சுப்பணி).பெயர் உத்திராபதி.இறந்தவருடம் 1992. பணிக்காலத்தில் சிறந்த முறையில் பணியாற்றி ஊழியர்களிடமும் அதிகாரிகளிடமும் நற்பெயர் எடுத்தவர்.காலத்தின் கோலம் அவரது குடும்பத்தை நிர்கதியாக்கியது.சபரிமலை சென்று வரும்போது மாரடைப்பால் கால்மானார்.குழந்தைகள் 3.மூவரும் பெண்கள்.அவர் இறந்த போது அவர்களுக்கு வயது முறையே 24,10,8.என்ன செய்வாள் அந்த தாய்?.முதல் பெண் திருமணம் ஆணவள்.இரண்டாம் பெண்னோ 6ம் வகுப்பு படித்து வருகிறாள்.மூன்றாவது பெண் 4ம் வகுப்பு படித்து வருகிறாள்.1999ல் தான் இரண்டாவது பெண் 10ம் வகுப்பு முடிக்கிறாள்.அதுவரை தட்டு தடுமாறி குடும்பத்தினை நடத்திய அந்ததாய் 1999 ல் அரசுக்கு மனு சமர்ப்பிக்கிறார்.எனது மகள் தற்போது உரிய கல்வித்தகுதி முடித்துள்ளார்,அவருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்கும் படி கேட்கிறார்.துறை கோப்பினை 2003 வரை பரிசீலித்தது? அதன் பிறகு மனு திருப்பப்படுகிறது.காரணம்-’கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசு தடை விதித்துள்ளது” -என்பதுதான்.2006 ல் அந்தத் தடையினை அரசு நீக்கியது.மீண்டும் அந்தத்தாய் மனு சமர்ப்பிக்கிறார்.இந்த மனுவை பரிசீலனை செய்த? துறை, ஊழியர் இறந்து 3 வருடங்களுக்குள் கருணை வேலை கேட்டு மனு கொடுக்க வேண்டும்,ஆனால் , நீங்கள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மனு கொடுத்துள்ளதால் உங்களது மனு நிராகரிக்கப் படுகிறது என உத்தரவிட்டது.
என்ன செய்வாள் அந்தத்தாய்?.கணவன் இறந்து 14 வருடங்கள் வனவாசம் வாழ்ந்தாகிவிட்டது.இன்னும் நீதி கிடைத்த பாடில்லை? நீதி மன்றத்தினை நாடினாள்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனபாலன் வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

 தீர்ப்பின் சாராம்சம்.

1.ஒரு குடும்பத் தலைவர் இறந்தவுடன் அந்த குடும்பத்தினர் வாழ்வாதாரத்துக்காக கருணை வேலை கேட்கின்றனர்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனுதாரர் கொடுத்த மனு தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் சரியானது கிடையாது.

2.இது போன்ற நிகழ்வுகளில் அதிகாரிகள் மனுவினை கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்.

3.ம்னு தாரருக்கு கருணை வேலை வழங்க முடியாது என்று அரசு மறுக்க முடியாது.

4.அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

5.மனுதாரரின் தகுதிக்கேற்ப 2 மாதங்களுக்குள் வேலை வழங்க பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப் படுகிறது.

அந்தத்தாயின் உள்ளம் எவ்வளவு மகிழும்.
சமீப காலமாக நீதிமன்றம் சென்றுதான் நீதியை பெறவேண்டும் என்கிற நிலை உள்ளது.இது மாற வேண்டும்.அதிகாரிகள் எந்த கோப்பிலும் நேரடியாக முடிவெடுப்பதில்லை.
அமைச்சுப்பணியாளர்களின் நேர்மையான ,மனசாட்சியுடனான ,நடவடிக்கைகளால் அதிகாரிகளை நல்லது செய்விக்க முடியும்.மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது போன்ற நேரங்களில் சரியான முடிவெடுக்கவும், வேகமாக முடிவெடுக்கவும் அமைச்சு பணியாளர்கள் அலுவலர்களுக்கு துணை நிற்க வேண்டும்.

அலுவலர்கள் ஒரு கோப்பினை தூங்க வைக்க நினைத்தால்கூட அமைச்சுப் பணீயாளர்கள் தொடர்குறிப்புகள் எழுதுவது மூலம் அந்தக் கோப்பிற்கு உயிர்கொடுக்க முடியும் என்பது என் எண்ணம். அதே நேரத்தில் ஒரு கோப்பின் மீது அலுவலர் முடிவெடுக்கா வண்ணம் அதைத் தூங்கச் செய்யவும் வைக்க அமைச்சுப் பணீயாளர்களால் செய்ய முடியும்.

அலுவலர் கவர்னர் என்றால் அமைச்சுப் பணியாளர்(கண்காணிப்பாளர், அ, நிர்வாக அலுவலரே முதல்வருக்குச் சமம். அனைத்து நிகழ்வுகளும் கவர்னரின் பெயரால் நடந்தாலும் நன்மை தீமை அனைத்திற்கும் முதலமைச்சரே பொறுப்பு அல்லவா..,

சே.வேங்கடசுப்ரமணியன் said...

உண்மை தான் சார் என் கருத்தும் அதுதான்,//அதிகாரிகள் எந்த கோப்பிலும் நேரடியாக முடிவெடுப்பதில்லை.
அமைச்சுப்பணியாளர்களின் நேர்மையான ,மனசாட்சியுடனான ,நடவடிக்கைகளால் அதிகாரிகளை நல்லது செய்விக்க முடியும்.மனம் இருந்தால் மார்க்கமுண்டு.//

Umapathy said...

சில நேரங்களில் அதிகாரிகள் ஒரு தலை பட்சமாக இருப்பதை நேரடியாக காண முடியும்,

இது போன்ற நிலையில் கருணை காசாக்கப்படுகிறது.

கஷ்டமான செயல்