15 October 2009

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உதவிமருத்துவர்களின் பணி நேரம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் உதவிமருத்துவர்களின் பணி நேரம் அரசு ஆணை எண் 339 (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை)14.10.2009ன் படி குறைக்கப்பட்டுள்ளது .
புதிய வேலை நேரம் மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நி
5 மருத்துவர்கள் பணிபுரியும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று பிரிவான பணிப்பகிர்வு.
1.காலை 8.00 முதல் 2.00 வரை
2.மதியம் 2.00 முதல் 8.00
3.இரவு 8.00 முதல் மறுநாள் காலை 8.00 வரை ( தங்கி பணிபுரிதல்) (இதில் காலை முதல் பணிப்பிரிவின் போது பொறுப்பு மருத்துவரும் (இன்சார்ஜ்) ஒரு உதவி மருத்துவரும். ஏனைய பணிப்பிரிவில் ஒரு மருத்துவர்.முந்தைய ஆணையில் இருந்த நிர்வாகப் பணிக்கான காலம் 2.00 முதல் 4.00 வரை தற்போது நீக்கப்பட்டுள்ளது.மேலும் காலை பணிப்பிரிவில் பணிபுரியும் உதவிமருத்துவர் எப்போதும் ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற நிலை வரும்.களப்பணி, நிவாகப்பணி,ஆய்வுக்கூட்டங்கள்,பள்ளிகளுக்கு செல்தல், ஏஎன்சி செக்கப் ,தடுப்பூசிப்பணிகள் மேற்பார்வை, போன்ற‌ ஏனைய பொதுசுகாதார பணிகளுக்கான பணிப்பகிர்வு இல்லை.சராசரியாக ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 க்கும் குறையாத புற நோயாளிகள் வருகை இருக்கும்.மேற்கண்ட பணிகளில் ஈடுபடும் இன்சார்ஜ் மருத்துவர்கள் புறநோயாளிகளைப் பார்க்க நேரம் இருக்காது.காலை பணிப்பிரிவில் இன்சார்ஜ் மருத்துவரை சேர்த்து 3 மருத்துவர்கள் பணியில் இருப்பது மட்டுமே பணிப்பளுவை குறைக்கும். எனவே 5 மருத்துவர்களுக்கு மாறாக‌ 6 மருத்துவர்கள்பணியிடம்
உருவாக்கவேண்டும்.)
ஒரு/இரு/மூன்று மருத்துவர்கள் பணிபுரியும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிள்
ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் காலை 9.00 முதல் 4.00 வரை பணி புரிய வேண்டும்.

( உணவு இடைவேளை 1.00 முதல் 1.30)
4.00 முதல் மறுநாள் காலை 9.00 வரை ஒருமருத்துவர் அழப்புப்பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.
அழைப்பு பணி என்பது நான்கு வித சூழல்களுக்கு மட்டும் தான்
1. பேரிடர்
2. தடுப்பூசி
3. கொள்ளை நோய்
4. உணவுநஞ்சேறல்
மேலும் புறநோயாளிகள் பரிசோதனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது??
(இனி மேம்படுத்தப்பட்ட‌ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் தட்டுப்பாடு இருக்கும்.இப்போதே கூடுதல் ஆ.சு.நி. பணியைத்தான் மருத்துவர்கள் விரும்புகிறார்கள்.)


மேலும் விவரங்களுக்கும் ஆனை நகல் பார்ப்பதற்கும்
http://www.payanangal.in/2009/10/blog-post_15.html

3 comments:

புருனோ Bruno said...

அழைப்பு பணி என்பது நான்கு வித சூழல்களுக்கு மட்டும் தான்

1. பேரிடர்
2. தடுப்பூசி பிரச்சனைகள்
3. கொள்ளை நோய்
4. உணவுநஞ்சேறல்

அடுத்தாக புறநோயாளிகள் பரிசோதனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது !!

சே.வேங்கடசுப்ரமணியன் said...

நன்றி டாக்டர்.ஆரம்ப சுகாதார நிலையங்களை மற்றுமொரு மருத்துவ மணையாக மட்டுமே கருதப்பட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டியது.பொது சுகாதாரப் பணிகளுடன் கூடிய துவக்க நிலை மருத்துவம் என்பதற்கான பணி நோக்கு இல்லை.மேலும் தற்போது இன்சார்ஜ் மருத்துவர்களுக்கு இருக்கும் பொறுப்புகள் அசாத்தியமானது.காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.பணியாளர்கள் பண‌ப்பயன்,என்.ஆர்.எச்.எம், என பணிச்சுமை அதிகம்.இதில் புறநோயாளிகளை பார்த்தல் என்பது நடைமுறை சாத்தியமில்லை.நிறைய குளறுபடிகள் ,தாமதங்கள்,ஏற்பட வாய்ப்பு உள்ளது.நிர்வாகப்பணிக்கென மாநில அளவில், மாவட்ட அளவில், ம்ருத்துவர்கள் உள்ளது போல, வட்டார அளவிலும் மருத்துவர் பணியிடங்களை உருவாக்குவது அவசியம்.

Dr.ராம் said...

//அழைப்பு பணி என்பது நான்கு வித சூழல்களுக்கு மட்டும் தான்

1. பேரிடர்
2. தடுப்பூசி பிரச்சனைகள்
3. கொள்ளை நோய்
4. உணவுநஞ்சேறல்//

//அடுத்தாக புறநோயாளிகள் பரிசோதனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது !!//

அப்படியா.. இதுபற்றி அரசாணையில் எதுவும் குறிப்பிடப்பட வில்லையே.. evening op பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை..

நடைமுறைக்கு வரும்போது குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.. குறிப்பாக 24 மணி நேர பிரசவ சேவை என்று அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஆன பிறகு 4 மணிக்குமேல் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவர்களுக்கு அழைப்பு பணி உண்டா இல்லையா..